சென்னை: சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப் பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க 1.72 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
நினைவிடம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது திமுக. அதன்படி, அக்கட்சியின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குமாறு கூறியது.
இதை அடுத்து, அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதி உடல் அடக்கம் செய்யப் பட்ட இடத்தில் கருணாநிக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்ததுடன், அரசின் இடம் 1.72 ஏக்கர் நிலத்தை அதற்காக ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.