சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்
கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால், காவிரியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப் படும் நீரின் அளவு அதிகரித்ததால், மேட்டூர் அணையில் இருந்தும் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குமாரபாளையம், பள்ளிபாளையம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குமாரபாளையம், பள்ளிப்பாளையத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார்.தொடர்ந்து ஈரோட்டில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.