சென்னை: அடமானப் பத்திரத்துக்கான முத்திரைத் தீர்வை, அடமானத்தைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
ரூ. 50 லட்சத்துக்குக் குறைவாக வாங்கப்படும் கடன்களுக்கு அடமானப் பத்திரத்துக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணமாக அரை சதவீதம் பெறப்படுகிறது.
ரூ.50 லட்சத்துக்கு மேல் வாங்கப்படும் கடனுக்கு அடமானப் பத்திரத்துக்கான முத்திரைத் தீர்வை ரூ. 25 ஆயிரமும் பதிவுக் கட்டணமாக ரூ. 5 ஆயிரமும் பெறப்பட்டது.
இந்நிலையில் அடமானப் பத்திரத்துக்கான முத்திரைத் தீர்வை உச்ச வரம்பை ரூ. 25ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
மேலும், அடமானப் பத்திரத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது.