மதுரை: 69 அடியை எட்டியதால் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 3,100 கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது.
வைகை அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 68.71 அடியாக இருந்தது. இன்று மாலை 3.30 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதை அடுத்து அணையிலிருந்து வினாடிக்கு 3,100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய வைகை பாயும் 5 மாவட்டங்களில் கரையோரப் பகுதி மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.