கடந்த மாதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குரல் வள சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார் முதற்கட்ட சிகிச்சை முடிந்த நிலையில் நேற்று சென்னை வந்தார் , கேரளாவில் இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பில் கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்க (ரூபாய்1 கோடி மதிப்புள்ள பொருட்கள்) களை வழங்குவதாக அறிவித்துள்ளார்
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கேரள மக்கள் இயற்கையின் சீற்றத்தினால் வரலாறு காணாத கன மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டு அனைத்து பொருட்களையும் இழந்து நிற்பதை பார்க்கும்பொழுது என் மனம் வேதனையாக உள்ளது. கேரள மாநில முதல்வர் திரு.பிணராயி விஜயன் அவர்கள் நிவாரண நிதியாக 8 ஆயிரம் கோடி ரூபாய் தேவை எனவும், உடனடி தேவையாக இரண்டாயிரம் கோடி ரூபாய் வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் கேரள மாநிலத்திற்கு நிவாரண நிதியாக அறிவித்த மத்திய அரசு,பின்பு ஹெலிக்காப்டர் மூலம் நேரடியாக சென்று பார்வையிட்ட இந்திய பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் வெள்ளத்தால் பாதித்த அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்த பின், கேரள மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வதுடன், மத்திய அரசின் நிதியாக இரண்டாம் கட்டமாக 500 கோடி ரூபாய்அறிவித்திருக்கிறது. கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பில் கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்(ரூபாய்1 கோடி மதிப்புள்ள பொருட்கள்)கேரள மாநிலத்திற்கு வரும் 24.08.2018 தேதியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரவித்துள்ளார்
To Read this news article in other Bharathiya Languages
தேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த் அறிவிப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari