சென்னை: சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான வளர்மதி உள்ளிட்ட 6 பேரை சென்னை பெரியமேடு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு நிதி திரட்டும் வகையில் கல்லூரி மாணவி வளர்மதி, அருண்குமார், காளிமுத்து, மணிகண்டன், ஷாஜன் கவிதா ஆகிய ஐந்து பேர் சென்னை சென்ரல் தொடர் வண்டி நிலையம் அருகே தப்பட்டை அடித்தும், பாட்டு பாடியும் நிதி சேகரித்து வந்துள்ளனர்.
இதனை பணி நிமித்தமாக ஸ்டாலின் என்ற நுண்ணறிவு பிரிவு காவலர் புகைப்படம் எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தம்மை எப்படி புகைப்படம் எடுக்கலாம் என வளர்மதி அந்த நுண்ணறிவுக் காவலரை அடித்ததாகக் கூறப்படுகிறது.
ஸ்டாலின் தாம் ஒரு நுண்ணறிவுப் பிரிவு காவலர் என்று கூறியும் வளர்மதியும் அவருடன் வந்த மற்றவர்களும் அவரை அடித்துள்ளனர். வளர்மதி தொடர்ந்து தாக்கிதால் ஸ்டாலின் பெரியமேடு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.
இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் அளித்த புகாரின் அடிப்படையில் வளர்மதி உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.