மதுரை: மு.க.ஸ்டாலின் செயல்படாத தலைவர் என்றும் தனது லட்சியம் திமுக.,வே என்றும் கூறியுள்ளார் மு.க.அழகிரி.
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தாய்க் கட்சியான திமுக.,வில் நான் சேர்வதில் எந்தத் தவறும் கிடையாது. திமுக.,வில் மீண்டும் என்னை இணைத்துக் கொண்டால் அதில் நான் சேர்வேன்.
செப்டம்பர் 5ஆம் தேதி பேரணிக்குப் பிறகு தமிழக மக்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தெரியும். அவசர அவசரமாக திமுக., தலைவர் பதவியை ஏற்க ஸ்டாலின் செல்கிறார். அவர் ஒரு செயல் படாத தலைவர்.
கருணாநிதி இருந்த போது கட்சிப் பதவியை விரும்பாதவன் நான், இப்போதா அதற்கு ஆசைப்படுகிறேன்?! என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு ஒரு தேர்தலில்கூட திமுக ஒழுங்காக வெற்றி பெற்றது இல்லை என்று கூறினார்.