தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருகிற 29 ஆம் தேதி ஈரோடு செல்கிறார். அங்கு, சுதந்திர போராட்ட தியாகி லட்சுமண ஐயரின் சிலை திறப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்கிறார்.
பின்னர் காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் மக்களை சந்தித்து மனுக்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெற்றுக்கொள்வார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.