சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி.
மு.க. ஸ்டாலின் தலைவரானதை நாளை நடைபெறும் திமுக பொதுக்குழுவில் திமுக., பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பாக வெளியிடுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.