திருச்சி: வரும் செப்.5ம் தேதி நிகழ்ச்சிக்கு தயாராகிவரும் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி சென்னையில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தக்கூடிய அமைதிப் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் வகையில் திருச்சியில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், உரிய அனுமதி பெறாமல் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக, மு.க.அழகிரி ஆதரவாளர்கள் 6 பேர் மீது திருச்சி மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.