கோத்தகிரி பகுதியில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் காட்டு யானைகள் குன்னுார் கோத்தகிரியை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளன. கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் தட்டப்பள்ளம் அருகே சாலையின் ஒரத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களிலும் இரவில் குடியிருப்பு பகுதியிலும் சாலையிலும் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத் துறையினர் காட்டு யானைகளை வேறு வனப் பகுதிக்குகள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.