தீபாவளி பண்டிகை இந்த வருடம் நவம்பர் 6-ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) வருகிறது. இந்தப் பண்டிகையையொட்டி அரசு விரைவுப் பஸ்களில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
அரசு விரைவு பஸ்களில் நவம்பர் 3, 4-ஆம் தேதிகளில் பயணம் செய்ய விரும்புவோர் இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதன்படி முன்பதிவு நேற்று தொடங்கியது.
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தினமும் சுமார் 1000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன
திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், கும்பகோணம் உள்ளிட்ட அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன.
300 கிமீ தூரத்துக்கு மேல் செல்லும் அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன.