கரூர்: சோபியா விவகாரத்தில் ஜாதி பிரச்னையை தூண்டி விட தி.மு.க துடிக்கின்றது – பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை மீது திட்டமிட்டே அவதூறு பரப்பும் வகையில் தி.மு.க கட்சி நடந்து வருவதாக கரூர் மாவட்ட பா.ஜ.க ஆர்பாட்டம் நடத்தியது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவர் பயணித்த விமானத்தில் இருந்த சோபியா என்ற மாணவி, ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என கோஷம் எழுப்பி அவரிடம் பிரச்னை செய்தார்.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழிசை சௌந்தர்ராஜன் அளித்த புகாரில், சோபியா மீது காவல் துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த பிரச்னை, எதிர்கட்சியினரால் வேண்டுமென்றே திட்டமிட்டு, தூண்டப் படுகின்றதாகவும், அதற்கு கண்டனம் தெரிவித்தும், கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சோபியா என்ற பெண் செயல்பட்டதாகவும், சோபியாவின் பின்புலத்தில் திராவிட கட்சிகள் இருப்பதாகவும், முக்கியமாக தி.மு.க இருப்பதாகவும் அக்கட்சியினை கண்டித்தும், மாணவி சோபியாவை கைது செய்யக் கோரியும், கரூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
கரூர் பேருந்து நிலையம் அருகே, நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், இந்தியாவினை வல்லரசாக்கும் பொருட்டு பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை செயல்படுத்து வருவதாகவும், தமிழகத்தில் பா.ஜ.க கட்சி சாதி வேறுபாடின்றி, அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைந்து வரும் நிலையில், பா.ஜ.க வில், சாதி பிரச்சினையை தூண்டி விட்டு, வேடிக்கை பார்ப்பதாக, கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், கரூர் நகர பா.ஜ.க தலைவர் செல்வன் முன்னிலை வகித்தார். இளைஞரணி நிர்வாகி கோபி,. கார்த்திக், சிவம் சக்திவேல் உள்ளிட்ட சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.