- Ads -
Home உள்ளூர் செய்திகள் ஆளுநர் நிகழ்ச்சியில் அதிமுக.,வினர் முண்டியடிப்பு! பரிதாப நிலையில் பாஜக.,வினர்!

ஆளுநர் நிகழ்ச்சியில் அதிமுக.,வினர் முண்டியடிப்பு! பரிதாப நிலையில் பாஜக.,வினர்!

கரூர்: கரூர் அருகே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்ட தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் அதிமுக.,வினர் முண்டியடித்து இருக்கைகளை அபகரித்துக் கொண்டனர். இதனால் அரசு அதிகாரிகளும் பாஜக., வினஉம் பின்னுக்குத் தள்ளப் பட்டனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறார். மேலும், வளர்ச்சி திட்டப் பணிகளைக் கேட்டறிந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியும் வருகிறார்.

அந்த வகையில் கரூருக்கு வெள்ளிக்கிழமை இன்று வருகை தந்தார் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித். அவர், கரூர் அருகே உள்ள கடவூரில் சேவாப்பூர் இன்ப சேவா சங்கம் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கிராமங்கள் வளர்ந்தால்தான் நாடு வளர்ச்சி பெறும். மஹாத்மா காந்தி கூறிய 7 கட்டளைகளை நாம் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் இவற்றை மறக்காமல் கடைப்பிடிக்க வேண்டும். நாம் இறக்குமதியில் கவனம் செலுத்தாமல் ஏற்றுமதியில் சிறக்க வேண்டும். இறக்குமதி அதிகம் என்பதால் தான் பெட்ரோல் விலை உயரத்தில் இருக்கிறது… என்று பேசினார்.

ALSO READ:  அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட முதல் வரிசையில் அ.தி.மு.க மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் உள்ளிட்ட அ.தி.மு.க வினர் அந்த வரிசைகளை அபகரித்தனர். இதனால், அரசு அதிகாரிகள் மாற்று இடத்தில் அமர்ந்தனர்.

இந்நிலையில் பாஜக.,வினர் கூட கடைசி வரிசையில் தான் அமர்ந்தனர். பாஜக., மாவட்ட தலைவர் நீ.முருகானந்தம் உள்ளிட்ட பா.ஜ.க வினர் ஓர் ஓரத்தில் தள்ளப்பட்டனர்.

ஏற்கேனவே எல்லா நிகழ்ச்சிகளிலும் அதிமுக., வினர் தான் ஆங்காங்கே முன்னுக்கு வரும் நிலையில் அரசு சார் நிகழ்ச்சியில், அதுவும் ஆளுனர் ஆய்வு மற்றும் ஆளுநர் நிகழ்ச்சியில் கூடவா இவ்வாறு வருவது என்று பலருக்கும் ஆச்சரியமும் வருத்தமும் கூடவே இருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக.,வுக்குக் கூட இல்லாத அக்கறை அதிமுக.,வினரிடம் இருக்கிறது என்றும், இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் முண்டியடித்தது ஏன் என்றும் பாஜக.,வினர் மட்டுமல்ல, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும் புலம்பியதைக் கேட்க முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சி … 

ALSO READ:  கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version