30-05-2023 3:02 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeஉள்ளூர் செய்திகள்இந்து சமுதாய ஒற்றுமைப் பெருவிழா சதுர்த்தித் திருவிழா! இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் வாழ்த்து!
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    இந்து சமுதாய ஒற்றுமைப் பெருவிழா சதுர்த்தித் திருவிழா! இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் வாழ்த்து!

    சென்னை: இந்து சமுதாயத்தை ஒற்றுமைப் படுத்தவே விநாயகர் சதுர்த்தித் திருவிழா ஒரு தெருவிழாவாக எல்லோருக்கும் பொதுவாகக் கொண்டாடப் படுகிறது என்று கூறி, தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் இந்துமுன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்.

    அவரது வாழ்த்துச் செய்தியில்…

    விநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்..

    விநாயகர் பெருமான் முழு முதற் கடவுள், அவரது அருளைப் பெற விநாயகர் சதுத்தியை உலகம் எங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். விநாயகர் பெருமான் தமிழ்நாட்டின் செல்ல கடவுள். தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும், தெரு முக்கிலும், ஆற்றங்கரை ஓரத்திலும் எங்கும் வியாபித்திருப்பவர் விநாயகர். எங்கும் காணமுடியாத சிறப்பு இதுவாகும்.

    அதுபோல தமிழ்நாட்டில் எழுதத் துவங்குவோர் எல்லோரும் முதலில் பிள்ளையார் சுழி எனும் எழுத்திற்கு அவசிமான சுழி (பூஜ்யம்), வளைவு, கோடு என இவற்றை உகாரம், அகராம், மகாரம் என்ற மூன்று சேர்த்து போடும் உ எனும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது என்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது.

    நல்ல காரியம் ஒருவர் ஆரம்பித்து வெற்றிகரமாக நடக்கும்போது, மக்கள், இந்த நல்ல காரியத்திற்கு இவர் தான் பிள்ளையார் சுழி போட்டவர் என்பர். இந்தச் சொலவடை யிலிருந்து, விநாயகரில் துவங்கப்படும் எந்த காரியமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருவது புலனாகிறது.

    தமிழகத்திற்கும் விநாயகருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழையும், அறத்தையும் வளர்த்த ஔவையார், நம்பியாண்டார் நம்பி போன்றோருக்கு அருள் புரிந்தவர் விநாயகர்.

    தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்தபோது, காக்கை வடிவில் வந்து தட்டிவிட்டு, காவிரி தமிழகத்திற்கு பெருக்கெடுத்து ஓட வைத்தவர் பிள்ளையார். ஸ்ரீரங்கநாதர் தமிழகத்தில் எழுந்தருளி அருள்வதற்கு விநாயகரின் லீலையே காரணம் என பல ஆன்மிக சம்பவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

    இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி திருவிழாவை ஊர்த் திருவிழாவாக, தெரு விழாவாக மாற்றி இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தும் பணியை 34 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் துவக்கியது. இன்று தமிழகம் எங்கும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு, சுமார் 30,000 ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதன் நோக்கம், இந்து சமுதாயத்தில் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து சமுதாய ஒற்றுமை ஏற்பட வேண்டும், இந்து சமய நம்பிக்கை வலிமைபெற வேண்டும் என்பதே.

    இந்து சமுதாய ஒற்றுமை, எழுச்சி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை தமிழகம் எங்கும் கொண்டாடிட விநாயகர் பெருமான் நல்லருள் துணை நிற்கட்டும். தமிழக மக்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக வாழ விநாயகர் சதுர்த்தி திருநாளில் எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் கருணையை வேண்டுகிறேன்.

    – என்று ராம.கோபாலன் அந்த அறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    eight + 11 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,024FansLike
    389FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,749FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக