வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். தமிழகம் தலிபான்களின் நகரமாக மாறி வருகிறது என்று செய்யதியாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் குறிப்பிட்ட போது…
1) கோயில்களில் சிலை மற்றும் நகை திருட்டை தடுக்க அறநிலையத் துறையின் மூலம் முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு தனியாக திருக்கோவில் பாதுகாப்பு படையை அமைக்க வேண்டும் .
2) தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர்
3) ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கம்யூனிஸ்டுகள், திராவிட இயக்கங்கள் ஆதரவு கொடுக்கின்றன.
4) என் உயிரைக் காப்பாற்றிய தமிழக காவல் துறைக்கு நன்றி என்று கூறினார் அர்ஜுன் சம்பத்.