சென்னை கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் உள்ள மாமரத்து சுயம்பு சித்த விநாயகர் ஆலயம் இந்தப் பகுதியில் புகழ்பெற்றது. இங்கே நேற்ற்று ஆளுநர் வருகைக்காக சிறப்பு வழிபாடுகளுடன் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழிபாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக மக்கள் அனைவருக்காகவும் பிரார்த்திப்பதாகச் சொல்லி, அர்ச்சனை செய்யச் சொன்னார். பின்னர் தாமே தூப தீப ஆரத்தி எடுத்து, விநாயகருக்கு வழிபாடு நடத்தினார்.
முன்னதாக ஆலயத்தின் சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் வழிபாடு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக வந்திருந்தனர்.