புதுக்கோட்டை: நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் அவதூறாகப் பேசியதாக அளிக்கப் பட்ட புகாரில் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில், சனிக்கிழமை தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பாஜக., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கூட்டத்தில் தடை செய்ய வந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நீதிமன்றத்தையும், போலீசாரையும் தரக்குறைவான சொற்களில் பேசியதாக புகார் கூறப் பட்டது. இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு துறையை அவமானப் படுத்தும் வகையில் விமர்சித்தல், சட்ட விரோதமாகக் கூட்டம் கூட்டுதல், சட்டத்தை மீறுதல், இரு பிரிவினர் இடையே கலத்தை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது திருமயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், ஹெச்.ராஜா நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி தமிழக டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருமயத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உட்பட 8 பேரை கைது செய்ய ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி, ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இநà¯à®¤à¯à®šà®®à®¯à®¤à¯à®¤à®¿à®©à®°à¯à®®à¯ பாசகவினரà¯à®®à¯ இவரைக௠கà¯à®£à¯à®Ÿà®°à¯ சடà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®²à¯ கைத௠செயà¯à®¯ அரசை வலியà¯à®±à¯à®¤à¯à®¤ வேணà¯à®Ÿà¯à®®à¯. பரபரபà¯à®ªà¯ விளமà¯à®ªà®°à®®à¯ எதிரà¯à®µà®¿à®©à¯ˆà®¯à®¾à®±à¯à®±à®¿à®¤à¯ தீமையே நலà¯à®•à¯à®®à¯. அனà¯à®ªà¯à®Ÿà®©à¯ இலகà¯à®•à¯à®µà®©à®¾à®°à¯ திரà¯à®µà®³à¯à®³à¯à®µà®©à¯, எழà¯à®¤à¯à®¤à¯ˆà®•à¯ காபà¯à®ªà¯‡à®¾à®®à¯! மொழியைக௠காபà¯à®ªà¯‡à®¾à®®à¯! இனதà¯à®¤à¯ˆà®•à¯ காபà¯à®ªà¯‡à®¾à®®à¯! தமிழே விழி! தமிழா விழி!