பாஜக., தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா போலீசாருடன் வாதம் செய்தது சரி என்றும், ஆனால் அவர் கூறிய வார்த்தையில் தமக்கு ஒப்புதல் இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ஹெச். ராஜா பேசியது குறித்து இருவேறு தகவல்கள் உள்ளன. உண்மை கண்டறிந்த பின் எனது கருத்தைக் கூறுகிறேன். ஹெச்.ராஜா பேசியது சரி, ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் உடன்பாடில்லை என்றார்.