கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தொழில்கள் மேலோங்க 1008 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் விஸ்வகர்மாவிற்கு பால்குடங்களினால் அபிஷேகம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை செய்தனர்.
விஸ்வகர்மா ஜெயந்தி செப்.17 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதை ஒட்டி, கரூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள விஸ்வகர்மாவிற்கு தொழில்கள் மேலோங்க 1008 பால்குடங்கள் எடுத்து வரப்பட்டு, பால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற மஹா தீபாராதனையில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக வீராட் விஸ்வகர்ம ஹோமம், ப்ரம்ம காயத்திரி ஹோமம், நவக்கிரஹ ஹோமங்களும், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீ விராட் விஸ்வகர்மா அருள் பெற்றனர்.
விழாவின் காணொளிக் காட்சி…