சென்னை: அதிமுக கட்சிக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; தினகரன் ஒரு குற்றவாளி. 28 கோடி ரூபாய் கொடுத்து ஜாமினில் வந்தவர் என கடுமையாக விமர்சனம் செய்தார் அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன்.
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றுது. இதில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், வீடியோ கேசட் கொடுக்க வந்தவர் தான் சசிகலா! தினகரன் ஒரு அக்யுஸ்ட். 28 கோடி ரூபாய் கொடுத்து ஜாமினில் வந்தவர் தினகரன். அதிமுகவிற்கும் தினகரனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை! நான் தான் அதிமுக கட்சியை ரத்தம் சிந்தி வளர்த்தேன்.
ஊழலைப் பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை. விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிந்தவர்கள் என சர்காரியா கமிஷன் அவர்களைப் பற்றி கூறியுள்ளது எனக் கூறினார் மதுசூதனன்!