சென்னை: ஜெ. தீபாவின் கணவர் மாதவன் மீது காவல் துறை ஆணையரிடம் ஓட்டுநர் ராஜா புகார் கொடுத்துள்ளார்.
ஜெ. தீபாவின் கணவர் மாதவனின் தூண்டுதலால் தன்னைப் பற்றியும் தமது குடும்பத்தினரைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப் படுவதாக கார் ஓட்டுநர் ராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
ஓட்டுநர் ராஜா, எம்.ஜிஆர் அம்மா தீபா பேரவையின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப் பட்டது. இந்த நிலையில், ராஜா இப்படி ஒரு புகாரை காவல் துறை ஆணையரிடம் அளித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து தன்னை நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், தீபாவுக்கும் தமக்குமான நட்பு தொடர்கிறது என்றார் ராஜா.