சென்னை: வடகிழக்கு பருவமழை வரும் 29 ஆம் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை முடியும் அன்றில் இருந்தே வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சாதகமாக இருக்கும் என தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே நேற்று கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கன மழை காரணமாக பொலவக்காளிபாளையம் என்ற இடத்தில் சாலை யோரம் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் ஈரோடு – சத்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது.
தடாகம் பகுதியில் பெய்த கனமழையால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. பாலம் இடிந்ததால் ஆனைக்கட்டி, காந்திபுரம் செல்லும் வாகனங்கள் துடியலூர் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.