நெல்லையில் 2017 ல் பூலித்தேவர் பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு தேவர் பேரவையின் மாநில தலைவர் முத்தையா வாகனத்தை சேதபடுத்திய வழக்கில் எம்.எல்.ஏ. கருணாஸ் முன்ஜாமீன் கோரிய வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மறுத்து விட்டார்.
முன்னதாக ஜாமீன் பெற்று வெளியில் வந்த கருணாஸை பூலித்தேவர் பிறந்த நாள் விழா தகராறு தொடர்பாக கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸார் சென்னையில் முகாமிட்டு கைது செய்ய முனைந்தனர். இந்நிலையில், இன்று காலை தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் கருணாஸ்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கருணாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்.
இபà¯à®ªà¯‹à®¤à¯ தி.à®®à¯.க.வின௠கபட நாடகம௠வெளிசà¯à®šà®¤à¯à®¤à¯à®•à¯à®•௠வநà¯à®¤à¯à®µà®¿à®Ÿà¯à®Ÿà®¤à¯‡ ! ஆதரவாளரà¯à®•ள௠எஙà¯à®•ே !