கோவை மாவட்டம் ஆனைமலையில் கிறிஸ்வவர்கள் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து மக்கள் கட்சியினர் ஏற்பாட்டில், தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீடர் தவத்திரு ததேவானந்த மகராஜ் அவர்களின் ஆசியில், ஞாயிற்றுக் கிழமை இன்று பொள்ளாச்சி ஆனைமலை ஸ்ரீதயானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பூஜ்யஸ்ரீ ததேவானந்த சுவாமிகள், இந்து மக்கள் கட்சி ஆழியார் செல்வராசு மாவட்ட பொது செயலாளர் மற்றும் பேராசிரியர் கருணாநிதி , ஆன்மீக மகளிர் அணி பொறுப்பாளர் கிருஷ்ணவேணி அம்மை யார், ராமச்சந்திரன், பர்ஷத் சூர்யா ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் கிறிஸ்தவ மதத்தில் இருந்து தாய் மதமான இந்து சமயத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி -சமய சடங்குகள் வழிபாடுகள் நடைபெற்றது.
தாய்மதம் திரும்பி வந்தவர்களை இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராம ரவிக்குமார் பாத பூஜை செய்து வழிபாடு செய்து, குலதெய்வ வழிபாடு, குரு வழிபாடு, கூட்டுவழிபாடு, கலசபூஜை, வருண பூஜை என பல மந்திர கூட்டு வேள்வி நடத்தினார்கள் .
இந்த தாய் சமயம் திரும்பும் நிகழ்விற்கு இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு பொதுச் செயலாளர் வெ.ரவி பாலன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.பால்ராஜ், திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர் அணி மோகன், பாலு, திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .
குருஸ் அந்தோணி- ராமசாமி; ஹாலீஸ் மேரி- தனலட்சுமி; ஹெலன் மேரி-அதிர்ஷ்ட லட்சுமி; சாந்தகுமாரி- பிரியா என பெயர் மாற்றம் செய்து உறுதி எடுத்து தாய் சமயமான இந்து மதத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
இது குறித்த காணொளிப் பதிவு..