சென்னை: சென்னையில் முதல் முயற்சியாக இரண்டு அடுக்கு பஸ் ஸ்டாண்ட் அமைகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால், மாதவரம் ரவுண்டானா அருகில் 8 ஏக்கர் பரப்பளவில் இந்த பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருகிறது.
இந்த இரட்டை அடுக்கு பஸ் ஸ்டாண்டில், தரை தளத்தில் 51 பேருந்துகளையும், மேல்தளத்தில் 50 பேருந்துகளையும் நிறுத்தி வைக்க முடியும்.
9 மாநகரப் பேருந்துகளுக்கு இந்த பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர மாநிலம், நெல்லூர், திருப்பதி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
பயணிகள் தங்கும் இடம், தாய்மார்கள் பால் ஊட்டும் அறை, நடத்துனர் ஓட்டுநர் தங்கும் வசதி உள்ளிட்டவை இந்த இரண்டு அடுக்கு பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வரும் போது, கோயம்பேடு பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
தமிழகத்திலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு பேருந்து நிலையமாக அமையும் இதனை வரும் 10ஆம் தேதி திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.