கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி #MeToo ஹேஷ்டேக்கில் அதிர்ச்சி தரத்தக்க பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.
சின்மயி தனது ட்விட்டர் பதிவில், ‘2005 அல்லது 2006 என நினைக்கிறேன். ஸ்விட்சர்லாந்தில் ஒரு கச்சேரிக்காக சென்றிருந்தோம். அங்கு கச்சேரியை அரங்கேற்றிய பிறகு, அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்குமாறு தெரிவித்தார். எதற்கு? என நாங்கள் கேட்டபோது, ‘வைரமுத்து இருக்கும் ஹோட்டலுக்குச் செல்லுங்கள்’ என்று அவர் தெரிவித்தார். ஏன் எதற்கு? என்று கேட்டபோது, ‘அவருக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்’ என்றார். மறுத்த நாங்கள் சென்னைக்கு அடுத்த விமானம் மூலம் திரும்பி விட்டோம்’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் வைரமுத்து இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, தனது டிவிட்டர் பதிவில்… அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்… என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை அடுத்து, இத்தனை காலம் தாமதமாக வெளியாகியுள்ள அந்த உண்மையை வெளிப்படுத்த, சின்மயி குறிப்பிட்டிருந்த சுவிஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப் பாளர்கள் தரத் தயாராக இருப்பதாகவும், அவர்களை தொடர்பு கொண்டு கேட்டு, இதன் பின்னணியை வெளிப்படுத்தலாம் என்றும் யோசனைகள் கொடுக்கப் பட்டன.
இதை அடுத்து, சுவிஸ் நிகழ்ச்சி குறித்த ஆதாரங்களை அவர்கள் கொடுக்கப் போவதாகவும் அவ்வாறு கொடுக்கப் படும் பட்சத்தில் வைரமுத்துவின் உண்மைக் குரல் ஊசலில் ஆடுவதாகவும் கூறப்படுகிறது.
I just got from the organizers at Switzerland who KNEW of @Vairamuthu s behaviour.
I will be getting in touch with them. pic.twitter.com/NvDUlyUMJf— Chinmayi Sripaada (@Chinmayi) October 10, 2018