Homeஉள்ளூர் செய்திகள்தாமிரபரணி மஹாபுஷ்கர விழா: தமிழக ஆளுநர் தென்காசி வருகை!

தாமிரபரணி மஹாபுஷ்கர விழா: தமிழக ஆளுநர் தென்காசி வருகை!

IMG 20181011 101550 e1539235282759 - Dhinasari Tamilதாமிரபரணி யில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை தென்காசி வந்தார். அவரை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென்மண்டல ஜ.ஜி மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் வரவேற்றனர்.

IMG 20181011 113014 - Dhinasari Tamil

உ.பி.யில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா போல தமிழகத்தில் 144 ஆண்டுகளுக்ககு பின் தாமிரபரணியில் புஷ்கர விழா இன்று நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு முன்னிட்டு தாமிரபரணி நதியில் நீராட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து துறவிகள், சித்தர்கள், ஆன்மீகவாதிகள் வெளிமாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வருகை தந்துள்ளனர். தாமிபரணி மகா புஷ்கர விழா இன்று துவங்கி 12 நாட்கள் நடக்கிறது.

IMG 20181011 103649 - Dhinasari Tamilஇந்தநிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ளவதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை தென்காசி ரயில் நிலையம் வந்தார். அவரை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென் மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன், மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

IMG 20181011 103550 - Dhinasari Tamilபின்னர் அவர் கார் மூலம் குற்றாலம் சென்றார். அங்கு உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் சிறிது நேரம் தங்கினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொள்ளவதற்காக பாபநாசம் சென்றார்.

தமிழக ஆளுநர் வருகையையொட்டி, தென்காசி, குற்றாலம் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,142FansLike
376FollowersFollow
66FollowersFollow
74FollowersFollow
2,831FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...