Homeஉள்ளூர் செய்திகள்கீழடி அகழாய்வில் கண்டு எடுக்கப் பட்டவற்றை பெங்களூரு தொல்லியல் துறையினரிடம் வழங்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு!

கீழடி அகழாய்வில் கண்டு எடுக்கப் பட்டவற்றை பெங்களூரு தொல்லியல் துறையினரிடம் வழங்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு!

IMG 20181012 151833 - Dhinasari Tamilகீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பெங்களூரில் உள்ள மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

IMG 20181012 151532 - Dhinasari Tamil

மதுரை மீனாட்சிநகரை சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கீழடியில் 2013 முதல் ஆய்வு நடத்தி சேகரித்த 5 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை, மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், பெங்களூருவில் பாதுகாத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இவற்றை பெங்களூருவில் உள்ள கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க அமர்நாத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

IMG 20181012 151629 - Dhinasari Tamilஅகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2 ஆயிரத்து 300 ஆண்டு பழமையானதாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் அசோகர் கால கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள்தான் பழமையானவை என்று வடஇந்திய அறிஞர்கள் வலியுறுத்தி வருவதாகவும், ஆனால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துக்கள், கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களில் இடம்பெற்றிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

IMG 20181012 151320 - Dhinasari Tamilகீழடி பழங்கால பொருட்கள் உறுதி செய்யப்பட்டால், தமிழ் பிரமி எழுத்துகளுக்கு அடுத்த இடத்துக்கு அசோகர் கால கல்வெட்டுகள் தள்ளப்படும் என்பதாலேயே, பல இடர்கள் ஏற்படுத்தப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது கீழடியில் முதல் இரண்டு கட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கபட்ட பொருட்களை பெங்களூரில் உள்ள மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். கட்டாயமாக வழங்க வேண்டுமென்றால் தமிழக தொல்லியல்துறை ஆணையர் முன்பாக தான் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

IMG 20181012 151347 - Dhinasari Tamilமேலும், அகழ்வாய்வு குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன் தயார் செய்த ஆய்வறிக்கையை, வருகிற 31ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மனுகுறித்து மத்திய தொல்லியல் துறை இயக்குனரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கினை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,121FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,207FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...