Homeஉள்ளூர் செய்திகள்கோவில்பட்டியில் பரபரப்பு! வயர்லெஸ் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்!

கோவில்பட்டியில் பரபரப்பு! வயர்லெஸ் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்!

IMG 20181012 153913 - Dhinasari Tamilகோவில்பட்டி அருகேயுள்ள வடக்குதிட்டங்குளத்தினை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் ஜோதிரமேஷ்(25). கூலி தொழில் செய்து வரும் ஜோதிரமேஷ் என்பவர் இன்று காலையில் கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகம் அருகேயுள்ள காவல்துறைக்கு சொந்தமான 100 அடி உயரமுள்ள வயர்லெஸ் டவரில் ஏறி தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

தன்னுடைய பள்ளி சான்றிதழ் காணவில்லை என்றும், அதனை மீட்டும் தரவேண்டும் என்றும், அதுவரை கீழே இறங்க போவதில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கோவில்பட்டி தாசில்தார் பரமசிவம், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் பேசி நைசாக கீழே இறங்க வைத்தார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஜோதிரமேஷ் கீழே இறங்கினார். அவரை போலீசார் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோதிரமேஸ் மீது வழிப்பறி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஜோதிரமேஷ் டவரில் ஏறி போராட்டம் நடத்துவது இது 3வது முறை என்பது குறிப்பிடதக்கது. இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,114FansLike
377FollowersFollow
73FollowersFollow
74FollowersFollow
3,337FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...

Exit mobile version