திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அப்துல்கலாமின் படத்திற்கு தலைமை ஆசிரியை சவுந்தர சேகரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாணவிகள் கணிதம், ஆங்கிலம், தமிழ், அறிவியல், சமூக அறிவியல், ஆகிய பாடங்களை விளக்கும் வகையில் கண்காட்சி நடத்தினர். இப்பள்ளியில் பயிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்கள் தங்கள் திறமையை வெளிபடுத்தும் விதமாக தங்கள் படைப்புகளை காட்சிபடுத்தியிருந்தனர் ,மேலும் மற்ற பள்ளிகளில் இருந்து வந்த மாணவ-மாணவியர்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர் ,
பள்ளியில் உள்ள தொன்மை பொருள் மன்றம், அன்னையர் மன்றம், தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் இந்த கண்காட்சி நடைபெற்றது. பாவூர்சத்திரம் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளி மாணவிகள் திரளாக வந்து இந்த கண்காட்சியை பார்த்து சென்றனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.