பணியில் இருக்கும்போது உயிர்நீத்த காவலர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
தமிழகத்தைச்சேர்ந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன், காவலர் ஜெகதீஸ் துரை உள்ளிட்ட இந்தியா முழுவதும் உயிரிழந்த 414 பேருக்கு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மகேந்திரகுமார் ரத்தோ தலைமையில் 60 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சரக காவல்துறை துணைத்தலைவர் கபில்குமார் சாரட்கர், துணை ஆணையாளர்கள் சுகுனாசிங், பெரோஸ்கான், அப்துல்லா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.