#metoo சர்ச்சையில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயர்களைப் பார்க்கும் போது பேரதிர்ச்சியாக உள்ளது என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
இது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து… திரைப்படத் துறையில் பெண்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்ற தாமும் தமது குழுவினரும் உறுதி பூண்டுள்ளோம். பெண்களை மதிக்கக் கூடிய துறையாக திரைப்படத் துறையை நான் காண விரும்புகிறேன்…
வலைதளங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கு சுதந்திரம் இருக்கிறது. அதே நேரம், பொய்யான குற்றச்சாட்டுகள் எழுவதைத் தடுக்க நாம் ஒரு நீதிநெறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.
என்று அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, வைரமுத்து விவகாரத்தில் தம் பெயர் பயன்படுத்தப் படுவதால், வைரமுத்துவுக்கு தம் இசையில் பாடல்கள் எழுத இனி வாய்ப்பு வழங்கப் போவதில்லை என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியதாக, செய்திகள் வெளியானது.
— A.R.Rahman (@arrahman) October 22, 2018