நெல்லை: தாமிரபரணி புஷ்கரத்தின் போது, நீராட வந்து நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பாற்றப்பட்டதாக நெல்லை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கூறப்பட்டிருப்பதாவது…
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி மகா பு~;கரணியை முன்னிட்டு 11.10.2018 முதல் சுமார் 2000 காவல்துறையினர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள 25 படித்துறைகள் ஃ தீர்த்தக்கட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். 11.10.2018 முதல் 23.10.2018 வரை 4,85,693 ஆண்களும், 6,09,800 பெண்களும் மொத்தம் 10,95,493 நபர்கள் புனித நீராடியுள்ளனர். புனித நீராட வந்த நபர்கள் நீரில் இழுத்து சென்றால் அவர்களை காப்பாற்றும் விதமாக வெளி மாவட்டத்திலிருந்து பேரிடர் மீட்புக் குழுவைச் சார்ந்த 80 காவலர்களும் அனுமதிக்கப்பட்ட 25 படித்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தனர். இவர்கள் நீரில் இழுத்து செல்லப்பட்ட 6 நபர்களை காப்பாற்றி திறம்பட செயல்பட்டனர்.
மேலும் கூட்டம் அதிகமான பகுதிகளில் தங்கள் பணங்களை தவறவிட்ட 2 நபர்களுக்கு அவர்கள் தவறவிட்ட பணம் ரூ.9,450 மற்றும் ரூ.1,980-யை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் கண்டுபிடித்து மீட்டுக் கொடுத்துள்ளனர்.
திருட்டு மற்றும் தொலைந்துபோன தங்க நகைகள் 89 கிராம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் திருடப்பட்ட 2 செல்போன்களும் மீட்கப்பட்டு அவைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள்; கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சொத்துக்கள் மீட்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்கள் பணியில் சிறப்பாக திறம்பட செயல்புரிந்த அனைத்து காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர். மேலும் களவு போன நகைகள், திருடப்பட்ட நகைகளை மீட்டு குற்றவாளிகளை கைது செய்தவர்கள் மற்றும் நீரில் இழுத்து செல்லப்பட்ட நபர்களை மீட்டவர்களுக்கு வெகுமதிகள் வழங்கி கவுரவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேற்படி தாமிரபரணி மகாபு~;கர விழாவில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படாத வகையில் சிறப்பான முறையில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.