ஈரோடு: தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு என தனியான தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புஞ்சை துறையம்பாளையத்தில் துணை மின் நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றினார் அமைச்சர் செங்கோட்டையன். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு என புதிய சேனல் ஒன்று உருவாக்கப் பட்டு வருவதாகக் கூறினார். அந்தப் புதிய சேனலில், பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்று தெரிவித்தார்.
தற்போது பள்ளிப் பாடங்கள், தகுந்த ஆசிரியர்கள் மூலம் வீடியொ ஒலிப்பதிவாக எடுக்கப் பட்டு, யுடியூப்பில் அதிகம் வலையேற்றப் பட்டுள்ளன. அவற்றை லட்சக் கணக்கான மாணவர்கள் பார்த்து பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.