மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் இன்று, பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆஜர் ஆனார்கள்.
அப்போது, நிர்மலாதேவி வாக்குமூலம் என நாளேடுகளில் வந்த செய்தி தவறானது என்று குறிப்பிட்ட முருகன், வழக்கை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்; நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான உதவிப் பேராசிரியர் முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, நாளிதழ்களில் போலீஸிடம் நிர்மலா தேவி கூறியதாக வெளியான வாக்குமூலம் பொய் என்றும், உண்மையை நீதிமன்றத்தில் நிரூபித்துக் கொள்வேன் என்றும் கூறினார்.
முன்னதாக, பேராசிரியர் முருகனும், கருப்பசாமியும்தான், மாணவிகளிடம் தாம் பேசியதற்கு காரணமாக அமைந்த இருவர் என்று நிர்மலா தேவி சிபிசிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாகின.