நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதை அடுத்து குற்றாலம் பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டிருக்கிறது!
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு வெளியிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் , தக்கலை , மார்த்தாண்டம் ,களியக்காவிளை, குளச்சல் , குலசேகரம் உட்பட மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.