நெல்லையில் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடி வெடித்ததற்காக, 25 குழந்தைகளை போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் நெல்லை போலீஸார். இது அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் தீபாவளி பட்டாசு வெடித்த 6 பேர் மீது அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்யப் பட்டது. விவரம் அறிந்து, இந்து முன்னணி நிர்வாகிகள் சென்றதும் மற்றவர்களை எச்சரித்து அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர்.
இந்நிலையில் சேரன்மகாதேவி ஆய்வாளர் ஜோசப் மதவெறியுடன் அணுகியதாக குற்றம் சாட்டிய இந்துமுன்னணி நிர்வாகிகள், சேரன்மகாதேவியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி கூம்பு குழாய் வைத்துள்ள பாதிரிகளை வழக்கு போட்டு கைது செய்வாரா என்று கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.