அயோத்தியில் ஸ்ரீராமபிரானுக்கு ஆலயம் அமைய வேண்டி சிறப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப் பட்டது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஒரு குழுவாக இந்த மனு அளிக்கப் பட்டது. இந்தக் குழுவில், Y.ராகவலு (விசுவ ஹிந்து பரிஷத் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர்), S. கோபால்ரத்தினம் (அகில பாரத இணைச் செயலாளர்), P.M. நாகராஜன் (தென் பாரத அமைப்பு செயலாளர்), சுவாமி ராமானந்தா மஹராஜ் (செயலாளர், அகில பாரத துறவியர் சங்கம்), மன்னார்குடி ஸ்ரீ செண்டாலங்கார சம்பத்குமார் ஜீயர் சுவாமிகள் (அகில பாரத துறவியர் சங்கம்), வாசுதேவன் (மாநில தலைவர் வி.ஹெச்.பி, வடதமிழகம்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினர்.
செய்தி: அ.முத்துராமன், நெல்லை