சமூக நலத்துறையுடன் இணைந்து அங்கன்வாடி மையங்களில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு LKG, UKG கற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் விரைவில் நிறைவேற்றப்படும். இதில் தவறு நடைபெற்றதாக செய்திகள் வருகிறது! அப்படி எதுவும் தவறு நடைபெறவில்லை- என்று, வேலூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எல்லா துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பள்ளி கல்வித் துறையில் பல்லேறு மாற்றங்களை டிசம்பர்