கோவை: கடந்த பிப்.14 அன்று காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பிரிவினைவாத முஸ்லிம்
பயங்கரவாதிகள் நடத்திய கொடூர மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியான 45 சிஆர்பிஎஃப் இந்திய துணை ராணுவப் படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கோவை மாநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஞாயிற்றுக் கிழமை இன்று மாலை நடைபெற்றது.

இரங்கல் மற்றும், பயங்கரவாத தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஆகியவை, கோவை தெற்க்கு தாலுகாஅலுவலகம் முன்பு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இதில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பொறுப்பாளர்கள் அமர்நாத் சிவலிங்கம், சண்முகம், நாகராஜ் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள்  L.சிவலிங்கம், குனியமுத்தூர் பாபு, கோகுல் ராஜ், விஷ்ணு ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநகர் மாவட்ட செயலாளர் L.சிவலிங்கம் காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது நடத்தபட்ட வெடிகுண்டு தாக்குதல் மிகவும் கண்டிக்கதக்கது. பாகிஸ்தானில் இருந்து நேரடியாக எந்த பயங்கரவாதியும் இந்தியாவுக்குல் நான்கைந்து தாக்குதல் நடத்துவதில்லை. நம் நாட்டில் இருக்கும் பிரிவினைவாத முஸ்லிம்கள் துணையுடன் தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குல் ஊடுருவி இது போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

முதலில் இங்கு உள்ள பிரிவினைவாத முஸ்லிம் பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களைக் களையெடுக்க வேண்டும். மேலும் உளவுத்துறையும், காவல் துறையும்
முஸ்லிம்கள் மீது எந்த விதமான வழக்கு பதிவும் நடவடிக்கையும் எடுக்க தயங்குவதே
பயங்கரவாதிகள் இந்தியாவில் அரசின் சலுகைகளை அனுபவித்து கொண்டு
சுதந்திமாக செயல்பட முக்கிய காரணம்.

1998 யை போல் தங்கள் அசம்பாவித நாசவேலைகள் மூலம் மீண்டும் ஒரு பதட்டமான சூழ்நிலையை கோவையில் ஏற்படுத்த பயங்கரவாதிகள் முயல்கின்றனர். காவல் துறையும், உளவுத்துறையும் விழிப்புடன் எச்சரிக்கையாக இல்லாவிடில் நம் நாடு நிச்சயம் முஸ்லிம் பயங்கரவாதிகள் சீரழிந்து போகும் என்றார்.

பின்னர் பேசிய அமர்நாத் சிவலிங்கம், இன்று இந்தியாவில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை தைரியமாக நியாயப்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுபோன்ற அவல நிலைக்கு காரணம் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு இங்கு உள்ள அரசியல் கட்சிகள் துணை போவதே காரணம். இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு சீமான் தனது கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து பேசவைத்ததோடு அதை நியாயப்படுத்தியும் பத்திரிகைகளுக்கு
பேட்டி அளித்தார்.

ஆனால் அதற்காக இது வரை தமிழக காவல்துறை சீமான் மீது எந்த விதமான ஓர்
வழக்கு பதிவும் செய்யவில்லை.

இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எதிராக செயல்படுபவர்கள் மீதும்
அவர்களுக்கு துணை போகும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மீதும் தேசிய
பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கொடி மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத முஸ்லிம் பயங்கரவாதி யாசின் மாலிக், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் உருவப்படங்களை செருப்பால் அடித்தும், தீயிட்டும் கொளுத்தினர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...