செங்கோட்டையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு நடந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடந்தது.
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் ஆண்டுதோறும் வர்த்தகசங்கம் சார்பில் மாசிமகத்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதே போல இந்தாண்டு 75 வது ஆண்டு மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு, தாலுகா அலுவலகம் முன்புள்ள வீர சைவ சுந்தர விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குடம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டது.
பின்னர் நகரின் முக்கிய விதிகள் வழியாக வலம் வந்து செங்கோட்டை அருள்மிகு குலசேகரநாதர் அன்னை அறம்வளர்த்த நாயகி தர்மஸம்வர்த்தினி ஆலயத்தில் பால்குட ஊர்வலம் நிறைவடைந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் உருவான அசம்பாவிதங்களைத் தொடர்ந்து நடைப்பெற்ற மாசிமக பால்குட ஊர்வலத்திற்கு நெல்லை ஏ.டி.எஸ்.பி தனபாலன், தென்காசி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் பொறுப்பு சக்திவேல், செங்கோட்டை, தென்காசி காவல்துறை ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், ஆடிவேல் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்போடு மாசிமகத்திருவிழா பால்குட ஊர்வலம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.