- Ads -
Home உள்ளூர் செய்திகள் மோடியால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் ! அழகிரி சொன்னா‘ராம்’..! ஆதரவு தந்தா‘ராம்’..! ஹெச்.ராஜா வரவேற்றா‘ராம்’..!

மோடியால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் ! அழகிரி சொன்னா‘ராம்’..! ஆதரவு தந்தா‘ராம்’..! ஹெச்.ராஜா வரவேற்றா‘ராம்’..!

மோடியால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் ! அழகிரி சொன்னா‘ராம்’..! ஆதரவு தந்தா‘ராம்’..! ஹெச்.ராஜா வரவேற்றா‘ராம்’..!

சற்று முன்… திமுக தலைவரின் மூத்த வாரிசு மு.க அழகிரி பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு!!! – என்ற தகவலுடன், இந்தப் படமும் சேர்ந்து வாட்ஸ்அப்களில் வலம் வந்தது.

பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் என்று சமூகத் தளங்களில் வைரலாக வலம் வந்த இந்தப் படத்தின் பின்னணியில் இத்தகைய வாசகங்கள் சொல்லப் பட்டாலும், தீவிர அரசியலில் இருந்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வீட்டில் ஹார்ட்டைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் அஞ்சும் நெஞ்சன் அழகிரி இப்படி சொல்லியிருப்பாரா என்ற கேள்வியையும் முன்வைத்தனர் பலர்.

இந்தப் படம் பொய்யானது என்று சிலர் கூற, இல்லை இல்லை இது பழைய படம் என்று சிலர் பதிலளிக்க, இன்றைய சமூக வலைத்தளப் பொழுது போக்கு பலருக்கும் சந்தோசப் பொழுது போக்காகவே இருந்தது.

ALSO READ:  தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

சமூக வலைதளத்தில் வைரலான அந்தப் படத்தில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் மு.க.அழகிரியும் ஒன்றாக இருக்க… ஹெச்.ராஜா, அழகிரிக்கு சால்வை அணிவிக்கிறார். இந்தப் படம் இணையத்தில் பெரிய அளவில் வைரலானது.

மு.க.அழகிரி எச்.ராஜாவிற்கு ஆதரவு அளிக்கிறார். அவருக்காக வாக்கு கேட்க போகிறார். திமுக வேட்பாளர்களை எதிர்த்து வாக்கு சேகரிக்க போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின. இதனை பாஜகவினர் அதிகம் பகிர்ந்தனர்.

மு.க அழகிரி பாஜகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். திமுக போட்டியிடும் இடங்களில் திமுகவிற்கு எதிராக பிரசாரம் செய்வார் என்ற பரபரப்பு செய்திகள் அடிபட்டன.

இநிலையில், இதற்கு அழகிரி விளக்கம் அளித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவிற்கு தான் ஆதரவு அளிக்கவில்லை. அவரும் நானும் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் அது. அதனை இப்போது பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஆதரவு அளித்துள்ளேன் என்ற தவறான பிரசாரத்தையும் பரப்பி வருகிறார்கள். நான் யாருக்கும் ஆதரவு தரவில்லை. என்னை யாரும் சந்திக்கவுமில்லை என்று அழகிரி விளக்கம் அளித்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

அண்மையில் ஒரு டிவி., வெளியிட்டிருந்த கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் 35 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியிருந்ததை விமர்சித்த அழகிரி, கருத்துக் கணிப்பு பொய்யாகும் என்றார். எனவே திமுக., வெற்றி பெறாது என்றும், திமுக., தோற்கடிக்கப் படும் என்றும் அழகிரி கூறியிருப்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version