12ம் வகுப்பு படித்தாயிற்று…. அடுத்து?

 

எம்.பி.பி.எஸ்., பி.இ., பி.எஸ்சி., பி.ஏ., என பாரம்பரிய படிப்புகளை மட்டுமே இன்னமும் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்கிற பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. நாம் எதைப் பெற வேண்டும், அதை எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பதோடு மட்டுமல்லாது, பற்று கொண்டால் நாம் எதையும் அடையலாம்.
நமது வாழ்க்கையின் விடலை பருவத்தில் அதாவது பள்ளி படிப்பை முடித்த காலகட்டத்தில் கண்ணில் பார்த்தது எல்லாம் மனசுக்கு நல்லதாகவே தெரியும். ஆனால் நீண்ட காலத்தில் தவறாக இருப்பதற்கு சாத்திய கூர்கள் அதிகம். இது ஒருவருடையே வாழ்கையில் முக்கிய முக்கியமான காலகட்டம். இந்த காலகட்டத்தில் நாம் எடுக்கும் முடிவு சரியான மற்றும் உறுதியான முடிவாக இருக்க வேண்டும். அதாவது திருமணத்திற்கு நாம் எடுக்கும் முடிவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியமானதாகும்.
முடிவுகள் எடுக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவைகள்:
1. தன் மீதான நம்பிக்கை
2. நாம் செய்யப்போவதை பற்றிய சரியான தகவல்கள்
3. தனது குடும்பத்தின் பொருளாதார பின்னணி
4. நாம் எடுக்க போகும் பாடத்தில் நமக்கு உள்ள நாட்டம்
5. சாதிக்க வேண்டும் என்ற வெறி
6. வரையறுக்கப்பட்ட குறிக்கோள்
7. காலத்தின் மதிப்பை உணர்தல்
நம்பிக்கை என்னும் ஆயுதத்தையும் நாம் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தையும் அடிப்படை குறிக்கோளாக கொள்ள வேண்டும். ஈடுபாடு உடைய உழைப்பு மிகவும் முக்கியமானதாகும். அதுமட்டுமல்லாது தெளிவான குறிக்கோள் மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும். இவ்வாறு முயற்சி செய்து அது முடியாமல் போனால் அல்லது தாமதமானால் வேறு வழியில் பயிற்சி செய்து நமது குறிக்கோளை அடைய வேண்டும்.
நமது முடிவு செய்த குறிக்கோளை அடைய நாம் செலவழிக்கும் நேரத்தை பணத்தின் அடிப்படையில் உணர பழக வேண்டும். அதாவது நாம் சினிமா பார்ப்பதற்கு ஆகும் செலவு மற்றும் நேரத்தை ஒரு நூலகத்தில் நாம் படிப்பதற்காக செலவு செய்தால் அந்த பணத்தின் மதிப்பு எப்படி இருக்கிறது என்று நாம் உணர வேண்டும்.
ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றதிற்காக நாம் கற்றுகொள்ளும் அனுபவம் ஆகும். ஒவ்வொருஅனுபவமும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தையும், மற்றவர்களுடன் நல்ல கருத்துக்களைக் கொண்டு விவாதிப்பதையும் வாழ்க்கையின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இத்தகைய பழக்கம் கல்விக்கும், எதிர்காலத்துக்கும் பயனுள்ளதாக அமையும்