கரூர் மாவட்டத்தில் தொடரும் மணல் லாரி விபத்துகள் ஒரு நாளில் மட்டும் மணல் லாரி மோதிய விபத்தில் கரூர் மாவட்டத்தில் இருவர் பலி

கரூர் மாவட்டத்தில் மணல் லாரிகள் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த ஒட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். அந்த விபத்தை தொடரும் வண்ணம் கரூர் அருகே மேலும் ஒரு மணல் லாரி இரு சக்கர வாகனத்தில் மோதியதில் முதியவர் ஒருவர் பலியானார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த தோகைமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் . 54 வயது மதிக்கத்தக்க இவர் தனது சொந்த வேலை காரணமாக  தோகைமலையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் குளித்தலையை நோக்கி வந்தார். அப்போது குளித்தலை சுங்ககேட்டை கடக்கும் போது எதிரே வந்த மணல் லாரி மோதியது. இச்சம்பவத்தில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்விபத்தில் உயிரிழந்த ஜெயராமனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.Accident photo 02 Accident photo 01