புதிய வகுப்பறை எம்.எல்.ஏ சரத்குமார் திறந்து வைத்தார்

Tenkasi தென்காசி
தென்காசியை அடுத்த அயன்குரும்பலாப்பேரியில்  அரசு உயர்நிலைப் பள்ளியில்   அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ரூ.16. 50 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3வகுப்பறைக் கட்டிடங்களின்  திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழப்பாவூர் யூனியன் தலைவர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை தங்கினார் திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் துரைசாமி, மாவட்ட கல்வி அலுவலர் பாலசிங்பொன்ராஜ், அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலர் ஜெயபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர், குலசேகரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் இளங்கோ வரவேற்றார்.  ஒன்றிய குழு உறுப்பினர் ராஜசேகரபாண்டியன், , பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளமதி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்
எம்.எல்.ஏ சரத்குமார் வகுப்பறைக் கட்டிடங்களை திறந்து வைத்து பேசியதாவது
கடந்த முறை நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்த போது சட்டமன்ற பகுதிக்குட்பட்ட பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து பேசி செயல்படுத்த வேண்டிய திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினேன். இங்கு பள்ளிக்கு 5 ஏக்கர் இடத்தை இப்பகுதியில்  உள்ளவர்கள் கொடுத்துள்ளனர். இது கல்வி வளர்ச்சியில் அவர்களின் நல்ல உள்ளத்தை காட்டுகிறது. பலர்  தங்கள் இடங்களை பிளாட்போட்டு விற்கும் இந்த காலத்தில், கல்விக்காக நீங்கள் முன்வந்து இடம் கொடுத்துள்ளது கல்வியின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையையும்  உங்கள் நல் உள்ளத்தையும் காட்டுகிறது. இறைவன் கொடுக்கும் செல்வத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பது எனது நோக்கம் ஆகும். இந்த பள்ளி தொடர்ந்து 4 ஆண்டாக 100% தேர்ச்சி பெற்று வருவதாக கூறினார்கள் , . இதற்காக பாடுபட்ட ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். இங்கு மேல்நிலைபள்ளி வருவதற்கு அரசுக்கு ரூ.2 லட்சம் பணம் செலுத்தியதாக கூறினீர்கள், இந்த பள்ளி மேல்நிலைபள்ளியாக உயர தேவனையானவற்றை  செய்து கொடுப்பேன், இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக  குலசேகரன்தெருவில் ரூ.5.50 லட்சம்  மதிப்பீட்டில்  கட்டப்படஉள்ள அங்கன்வாடி மையத்திற்கு யூனியன் தலைவர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் சமக மாநிலை அமைப்பாளர் ஆர்.கே.காளிதாசன், மாவட்ட செயலாளர் அதியமான், , தென்காசி தொகுதி கழக செயலாளர் கே.வி.கே.துரை, .  ஒன்றிய குழு உறுப்பினர் ராஜசேகரபாண்டியன்   அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட தென்காசி ஒருங்கிணைப்பாளர் செல்வவிநாயகம்,கல்வி வளர்ச்சி குழு செயலர் அருணாசலம் ,தமிழ்மணி  வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமாரிலதா, சமக நகரசெயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.