சர்ச்சைப் பேட்டி: ஈ.வி.கே.எஸ்., மீது அமைச்சர் விஜய பாஸ்கர் அவதூறு வழக்கு

சென்னை: அதிகாரி மரணத்தில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டி பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில், மாநகர அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்… கடந்த மார்ச் 23ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டி ஒன்றில், அதிகாரி மரணத்தில் அமைச்சருக்கு தொடர்பு என்று கூறியுள்ளார். அவர் தெரிவித்த கருத்து ஆதாரமற்றது. இதனால், பொதுமக்கள் மத்தியில் அமைச்சருக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏண்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.