குற்றாலம் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி

தென்காசி, குற்றாலம் மெயினருவியில்
வெள்ளத்தில் சிக்கிய சிறுமி குற்றாலம் பகுதியில் பெய்த கன மழையால் மெயினருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிறுமி இழுத்துச் செல்லப்பட்டார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. மாலையில் குற்றாலம், தென்காசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் கன மழை பெய்தது. குற்றாலம் மலை பகுதியில் கன மழை நீடித்ததால் அருவிக்கு வரும் தண்ணீர்வரத்து அதிகரித்து திடீர் வௌ;ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த பண்பொழி முருகன் மகள் துர்க்காதேவி (12) என்ற சிறுமி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்
இதனை அறிந்த சுற்றுலாப் பயணிகள் அச்சிறுமியை காப்பாற்ற போராடினார்கள். சிறுமி வெள்ளத்தில் அண்ணாசிலை ரோடு வரை இழுத்து வரப்பட்டதை சுற்றுலாப் பயணிகள் பார்த்துள்ளனர்அதன் பின்னர்பள்ளத்தில் தண்ணீர் சீறி பாய்ந்ததில் சிறுமி மாயமானார். தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் சிறுமியை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்