இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் ,ஹெச் .ராஜா

TENKASI தென்காசி பா.ஜ.தேசியச் செயலாளர் ராஜா கடையநல்லூரில் நிருபர்களிடம் கூறியதாவது தமிழகத்தில் பெரியார் கொள்கைக்கு இனி இடமில்லை. தாலி அகற்றும் போராட்டம் பிசுபிசுத்துப் போனது. திராவிடர் கழகத்தினர் பூணுல் அறுப்பில் ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் திராவிட கழகத்தை தடை செய்து வீரமணியை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிட கழகத்திற்கு தி.மு.க.மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது. பெரியாரின் சிலை நிறுவப்பட்டுள்ள இடங்களில் உள்ள இந்து எதிர்ப்பு வாசகங்களை அப்புறப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி பற்றி நாகரிகமின்றி விமர்சனம் செய்த காங்.மாநில தலைவர்  இளங்கோவன் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. இதனை எதிர்க்கும் எதிர்கட்சிகள்தான் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகின்றனார் அணைக்கட்டு நீர்பாசன வசதிக்காக மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும். தமிழகத்தில் நதிநீர் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் மேன்மையடைவர் இவ்வாறு அவர் கூறினார்