மதுரையில் போலி நிதி நிறுவனம் மூலம் 11 ஆயிரம் பேரிடம் ரூ.50 மோசடி செய்த 4 பேர் கைது..!

கடந்த 2011ஆம் ஆண்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ‘மதுரம் புரமோட்டா்ஸ் அண்ட் பிராப்பர்டீஸ் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மதுரை, விழுப்புரம், கடலுார் ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது.

இந்நிறுவனத்தின் இயக்குநர்காள மதுரையச் சேர்ந்த சரவணக்குமார், நமச்சிவாயம், கணேசன் மற்றும் கதிரவன் ஆகிய 4 பேர் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அதிக வட்டித் தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாயை வசூல் செய்ததாக கூறப்படுகிறத. பண்ம் செலுத்தியவா்களுக்கு முதிர்வு காலம் முடிந்தும் கொடுத்த தொகையை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் வேலுாரைச் சேர்ந்த விக்ரம் என்பவர் கடந்த ஆண்டு வேலுார் மாவட்ட பொருளாதார குற்றபிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, மதுரம் புரமோட்டர்ஸ் அண்ட் பிராப்பர்டீஸ் லிமிடெட் நிறுவனத்தினர் தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பேரிடம் பணத்தை பெற்று கொண்டு அந்த தொகையை முதலீட்டாளர்களிடம் திருப்பித் தராமல் ரூ.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்களை கைது செய்ய முயன்றபோது அவர்கள் தலைமறைவாகினா்.

இதற்கிடையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் வேலுார் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சென்றனர்.

அங்கு பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்த சரவணக்குமார், கதிரவன், நமச்சிவாயம், மற்றும் கணேசன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
இவர்களது நிதி நிறுவனங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள், பாண்டு பத்திரங்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...